Entering the main hall of the International Book Fair
தற்பொழுது கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியும் புத்தக சந்தையும் BMICHஇல் நடந்துகொண்டிருப்பதை அறிவீர்களா? எதிர்வரும் செப்டம்பர் 26 வரை இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் என்ன இருக்கிறது என்றா கேட்கிறீர்கள்? நிறையவே இருக்கிறது என்கிறோம் நாம்.
வருடாந்த நிகழ்வான கொழும்பு சர்வதேச புத்தக சந்தை (மற்றும் கண்காட்சி) கொழும்பில் நடைபெறும் கண்காட்சிகளில் அதிகளவு பொதுமக்களையும் வாடிககையாளர்களையும் கவர்கின்றது. இந்த நிகழ்வின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த 9 நாள் நிகழ்வில் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டைய பிரதேசமான பவுத்தாலோக மாவத்தையில் நிரம்பி வழியும் கூட்டமும் போக்குவரத்து சிக்கல்களும் இந்நிகழ்வு எவ்வளவுதூரம் பிரபல்யமானது என்பதற்கு சான்றாகும்.
The ubiquitous discounts
இங்கு நாட்டின் பெரிய பதிப்பகங்கள் கடைவிரித்திருக்கின்றன, புத்தகங்களும் 15% தெடக்கம் 20% வரையான விலக்கழிவில் கிடைக்கின்றது.
புத்தக கண்காட்சியாக மட்டுமல்லாது கொழும்பின் பொழுதுபோக்கு நிகழ்வாகவும் இது பரிணாமம் பெற்றுள்ளது. வெறும் ரூபா 10 நுழைவுக்கட்டணம், சாதாரண விலையில் உணவு, நெருக்கமில்லாமல் ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளக்கூடிய அழகான பெரிய இடம் என்பன காரணமாக காலி, நீர்கொழும்பு போன்ற தொலை தூரத்திலிருந்தும் பலர் இங்கு வருகிறார்கள்.
Bustling sales at a book stall
இங்கு குவியும் கூட்டத்திற்கு நமது நாட்டில் இதைப்போன்ற பொதுமக்கள் நிகழ்வுகள் அரிதாக இருப்பதும், அவை சகலருக்கும் போக்குவரத்திற்கு தோதான இடத்தில் நடக்காதிருப்பதும் ஒரு காரணமாக இருந்தாலும் புத்தகங்கள் முக்கியமான காரணமே. இலங்கையர்கள் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை என்பது பிழையான கருத்து என்பதை; இன்றும் வாசிக்கும், வாசிக்க பிரியப்படும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நிரூபிக்கிறார்கள். இங்கு பிரபல கடைக்காரர்களுக்கு காசுவாங்குவற்கே நேரம் போதவில்லை என்றால் பாருங்களேன். மலேசியா பாகிஸ்தான் இந்தியா போன்ற நாடுகளிலிருந்தும் புத்தக
விற்பனையாளர்கள் கலந்துகொண்டு மக்களின் ஆர்வத்தில் இலாபம் பார்க்கிறார்கள்.
A more pulpy book
சிங்கள காதல் கதை நாவல்கள், மேற்கு நாட்டு புத்தகங்களின் மொழிபெயர்ப்புகள், சுயசரிதைகள், பாடப்புத்தகங்கள், சமையற்புத்தகங்கள் என 50க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் இங்கு கிடைக்கின்றன.
The BMICH building and the model farm inside the grounds
நிகழ்வின் தனித்துவமே இது வெறும் சந்தையாக இல்லாமல் நண்பர்களை சந்திப்பதற்கான இடமாக, சாப்பாடு வகைகளை ருசிப்பதற்கான இடமாக இருப்பதுதான். வருபவர்களுக்கு BMICHஇல் இருக்கும் சிஐசியால் நடாத்தப்படும் மாதிரி பண்ணையையும் பார்க்க முடியும். இங்கு எலுமிச்சை, மாதுளை, தக்காளி போன்றவற்றுடன் இன்னும் பல பயிர்கள் செய்கை பண்ணப்பட்டுள்ளதை காணலாம். சில மாடுகள் கூட இருக்கின்றன.
Good sago from the Mount Lavinia Hotel stall
Tip: மவுன்ட்லவீனியா ஹோட்டலினால் நடாத்தப்படும் கடையில் கிடைக்கும் சவ்வரிசி பாயாசம் (ரூபா 50) அசத்தலாக இருக்கின்றது.
Note: இலங்கையின் சனத்தொகையில் 30% வீதமானோர் தமிழ் மொழியை பேசுபவர்களெனினும் கண்காட்சியில் அவ்வளவு தமிழ் புத்தகங்களை காணக்கிடைக்கவில்லை.