Artwork for Better Parenting Top Banner 1
Artwork for Better Parenting Top Banner 2

4/5

Arabian Knights

379, Galle Road, Kollupitiya, Colombo 03


After an initial hiccup, Arabian Knights has bounced back well. The food is nearly back to their former glory, and coupled with the new venue, things are looking up again.



கொழும்பின் அழகான கடற்கரை வீதியான மரைன் ட்ரைவில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிரிய உணவகம் அரேபியன் நைட்ஸ். இது டேக் அவே உணவகமாக அமைந்துள்ளமையால் வெறும் 4 பேருக்கே உட்கார்ந்து சாப்பிட இருக்கை வசதி செய்திருக்கிறார்கள்.( ஆனாலும் நீங்கள் அங்கு இருந்து சாப்பிட முடிவெடுப்பீர்களானால் அம்முடிவையிட்டு திருப்திப்படுவீர்கள் ) இங்கு எல்லோரும் மிக்க நட்புடன் பழகுகிறார்கள். அவர்களது உணவில் அதிகமாக அன்பையும் உங்கள்மீதான அக்கறையையும் கலந்தே தருவதாக நீங்கள் உணர்வீர்கள்.

உணவு

நாம் அங்கு ஒரு பகல் போசனத்துக்காக சென்றிருந்தோம். செப் (தலைமை சமையற்காரர்) எமக்கு இலவசமாக தநத இதய வடிவில் செய்யப்பட்ட "பலாபீல்" உடன் எமது உணவு ஆரம்பமானது. இந்த செப் பற்றியும் சொல்லவேண்டும். இவர் சிரிய நாட்டை சேர்ந்தவர். அதனால் இவருக்கு ஆங்கிலமோ சிங்களமோ தமிழோ தெரியாது. அதுவே இவர் நன்றாக சமைப்பார் என்ற நம்பிக்கையை தருகின்றது. கண்ணைபறிக்கும் சிவப்பு நிறத்தில் அமைந்த குல்லாய் அணிந்திருக்கிறார். பழகுவதற்கும் இனிமையானவர். எமக்கு பலாபீல் ஐ தரும்போது "லவ் சிறீலங்கா" என்றார்.

"பலாபீல்" மொறுமொறுப்பாக நன்றாக இருக்கின்றது. மேற்புறம் எள்ளு போட்டிருக்கிறார்கள். தொட்டுக்கொள்ள "தஹினி சேஸ்" தருகிறார்கள்.

பகல் சாப்பாடாக நாம் "ஸ்பைஸி சிரியானா மீல்" (ரூபா 460) ஒரு "பலாபீல் வெஜ் சான்ட்விச்" (ரூபா 230) என்பனவற்றை நாம் ஓடர் செய்தோம். "சிரியானா மீல்" என்பது ஒரு மாட்டிறைச்சி அல்லது கோழி இறைச்சி சவர்மா, பிரன்ச் பிரைஸ், இரண்டு பலாபீல் மற்றும் கோல்ஸ்லோ (கோவா சலட்) ஆகியவற்றை கொண்டிருக்கின்றது.

"சவர்மா" பற்றிச்சொல்வதானால்; இலங்கையில் பல இடங்களில் இதை சரியாக செய்யத்தெரியாமல் இருக்கையில் இங்குதான் அதை சரியாக அதற்கேயுரிய தனிச்சுவையுடன் செய்திருப்பதை உணர்ந்தேன். தக்காளி, (ஊறுகாய்போல்) பதனிடப்பட்ட பீட், பார்ஸ்லி என்பனவற்றால் அது செய்யப்பட்டிருந்தது. மற்றும் சுவையான வெள்ளைபூண்டு மயோனைஸ், சிலி சோஸ் என்பனவும் உண்டு. இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது அராபிய உணவை ருசியாக்குகின்றது. இதுதானா நான் சாப்பிட்ட மிகச்சுவையான சவர்மா என்று கேட்டால் பதில் இல்லை என்றாலும் (ரொட்டி இன்னும் கொஞ்சம் மொறுமொறுப்பாக இருந்திருக்கலாம் என்பதால்) இலங்கையில் சுவைத்ததில் இதுதான்!

ப்ரைஸ் உம் அதனுடன் கிடைக்கும் சோஸும் விரைவாக தின்று தீர்க்கவைக்கும்; பலாபீலுக்கு அதற்கேயுரிய தஹினி சோஸ், நிரம்பியிருக்கும் சவர்மா என எல்லாம் நன்றாக இருந்தாலும் கோல்ஸ்லோ மட்டும் பொருந்தவேயில்லை.(இவ்விடத்தில் எனக்கு கோல்ஸ்லோ ஒருபோதும் பிடிப்பதில்லை என்பதையும் கருத்திற்கொள்ளவேண்டும்)

பலாபீல் அவ்வளவாக எனது நண்பிக்கு பிடிக்காவிட்டாலும் அவளது பங்கையும் சேர்த்து சாப்பிடுவது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருந்தது. அவளுக்கு அது இன்னும் கொஞ்சம் மெதுமெதுவென இருக்கவேண்டுமாம். அதேவேளை அதிகமாக பொரிக்கப்பட்டிருக்கவும் கூடாதாம். அவை உண்மையென்றாலும் ஆளாளுக்கு விருப்பு வெறுப்புகள் வேறுபட்டதல்லவா? இருந்தாலும் எம் இருவருக்கும் இடமும் உணவும் நன்றாக இருக்கிறதென்பதில் கருத்து வேறுபாடு வரவேயில்லை.

பணிபுரிபவர்களிடம் கேட்டறிந்ததில்; இங்கு மிகப்பிரபலமான உணவாக கோழி இறைச்சி / மாட்டிறைச்சி கப்ஸா (ரூபா 480) இருக்கிறதாம். அதை சுவைக்க இன்னொருநாள் வரவேண்டும்.

பானங்கள்

இங்கு "போலோ மின்ட் லெமனேட்" (ரூபா 200) என்றொரு பானம் கிடைக்கின்றது. அது "கொமன்ஸ்" இல் கிடைக்கும் "லைம் அன்ட் மின்ட் ப்fரப்பே" போல் இருந்தாலும் இங்கு ரூபா 100 குறைவாகும். மற்றும் அரேபியன் நைட் ஸ்பெசல் "லேயர் கொக்டெயில்" (மாம்பழம், பப்பாசி, வாழைப்பழம் என்பனவற்றின் ஜூஸ் அடுக்குகளாக இருக்கும்) என்பது பொம்பே "சுவீட் மஹால்" இல் கிடைப்பது போல் இருக்கிறது. "பனானா மில்க் ஷேக் வித் ஹனி அன்ட் நட்ஸ்" உம் இருக்கின்றது. அடுத்தமுறை முயற்சித்து பார்க்கவேண்டும்.

அமைவிடம்

மரைன் ட்ரைவ் (கொழும்பு ப்ளான் வீதி) கொழும்பில் அதிகமானவர்களால் விரும்பப்படும் வீதியாகும். ஒரு புறமிருக்கும் கடற்கரையும் அங்கு ரசிக்கக்கூடிய சூரிய அஸ்த்தமனமும் அழகூட்டுவன. மேலும் இங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடமும் உண்டு. இவை எல்லாம் அரேபியன் நைட்ஸ்க்கு வசதியாக அமைந்தாலும் வெறும் நான்குபேருக்கு மட்டுமே இருக்கை வசதிகள் இருப்பதால் குடும்பத்துடன் சாப்பிடச்செல்ல பொருத்தமான இடம் அல்ல. எனக்கென்றால் இங்கு டேக் அவேயில் சாப்பாட்டை எடுத்துச்சென்று கடற்கரையில் சாப்பிடுவது பிடித்திருந்தாலும் எல்லாருக்கும் அது பிடிக்காதல்லவா?

விலை

எமக்கு இன்று எல்லாமாக (வரிகள், சேவைகள் உள்ளடங்கலாக) ரூபா 1,190 செலவானது. எப்படியோ இங்கு ரூபா 500 இல் நல்ல உணவு சாப்பிடமுடியும்.

பொழிப்பு

உணவு அருமையாக இருக்கின்றது. பணியாளர்கள் அன்பாக இருக்கிறார்கள். அவர்கள் கவனமாக சமைத்த உணவை பண்பாக பரிமாறுகிறார்கள். சமையற்காரர்கள் அரேபியர்களாக (சிரிய நாட்டை சேர்ந்தவர்கள்) இருப்பதால் உண்மையான அரேபிய உணவு கிடைக்கின்றது. நல்லதொரு சாப்பாட்டிற்கு தரமும் சேவையும் நன்றாக இருக்கவேண்டும். அது இங்கு நன்றாகவே இருக்கின்றது என்பதால் நாம் இவ்விடத்தை பரிந்துரைப்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

TIP

In case you forgot, they also deliver.
All Reviews

After all these years, Arabian Knights seem to be doing pretty well, and going strong.

Arabian Knights has long been one of Colombo's Middle Eastern staples, with reasonable prices and strong flavours.

After an initial hiccup, Arabian Knights has bounced back well. The food is nearly back to their former glory, and coupled with the new venue, things are looking up again.

So Arabian Knights has just moved from their small but popular eatery at Marine Drive to a proper restaurant in Kollupitiya Galle Road. It's an awesome place to hang out at, but the food was bit disappointing judging by their old Marine Drive standards.

Arabian Knights is a new and absolutely charming Syrian restaurant right by the sea. It only has about four seats and is more a takeaway joint, but if you walk in you'll be glad you did. Everybody there is quite charming (I said it twice cause it's true) and you can taste that they've put love and care into the food.

සිංහල ඩයින්-ඉන් විතරක් නෙවෙයි, ඩිලිවරිත් තියෙන නිසා ඇරබියන් නයිට්ස් එකේ කෑම බීම රස බලන්න රෙස්ටෝරන්ට් එකට යන්න ම ඕනේ නැහැ.

සිංහල ඇරේබියන් නයිට්ස් කියන්නේ මුහුද අද්දර පිහිටි අලුත්, ආකර්ශනීය සිරියානු අවන්හලක්. එහි තිබෙන්නේ ආසන හතරක් පමණයි. ඒ කියන්නේ එය වැඩිපුර කෑම පිටතට රැගෙන යන තැනක්. ඒත්, ඇතුළට ගියා නම් ඔබ සතුටු වෙයි. එහි සිටින අය හරිම සුහදයි. කෑම රසවෙන්නේ ඔවුන්ගේ ආදරය, සෙනෙහස නිසා වෙන්න ඇති.

தமிழ் கொழும்பின் அழகான கடற்கரை வீதியான மரைன் ட்ரைவில் புதிதாய் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிரிய உணவகம் அரேபியன் நைட்ஸ். இது டேக் அவே உணவகமாக அமைந்துள்ளமையால் வெறும் 4 பேருக்கே உட்கார்ந்து சாப்பிட இருக்கை வசதி செய்திருக்கிறார்கள்.( ஆனாலும் நீங்கள் அங்கு இருந்து சாப்பிட முடிவெடுப்பீர்களானால் அம்முடிவையிட்டு திருப்திப்படுவீர்கள் ) இங்கு எல்லோரும் மிக்க நட்புடன் பழகுகிறார்கள். அவர்களது உணவில் அதிகமாக அன்பையும் உங்கள்மீதான அக்கறையையும் கலந்தே தருவதாக நீங்கள் உணர்வீர்கள்.

Address

379, Galle Road, Kollupitiya, Colombo 03

Directions

It's a little past McDonalds on Galle Road, right opposite Amana Bank on your right.

Contacts

Facebook Website Twitter

Report Inaccuracy

Closed right now

Cuisine

Syrian

Price Range

Between Rs. 200 - Rs. 1000

Dish Types

Biriyani Shawarma

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
4
Service Rating
4
Ambience Rating
4
User Reviews
N
2

3/5

0

Nusra Cader

Don't get the harira. Just don't. Like cheap tomato soup from a can, or worse, like watered down puree with some spices. Weirdly sweet.
I'm not sure how Yamu has given this place a 4/5. They've been meh since moving to colpetty.

S
1

5/5

0

Swash514230

Best shawarmas i have ever tasted.

N
2

3/5

0

Nusra Cader

Don't get the harira. Just don't. Like cheap tomato soup from a can, or worse, like watered down puree with some spices. Weirdly sweet.
I'm not sure how Yamu has given this place a 4/5. They've been meh since moving to colpetty.

S
1

5/5

0

Swash514230

Best shawarmas i have ever tasted.

M
1

5/5

0

Madhushanka Ranatunga

If anyone wants to try Good Arabian food… hands down this is the best you could find…
There hummus/ Thabule & kebabs are exceptional!!!

N
1

4/5

0

Nilushka Perera

We loved the hummus, which was done three ways. But the cheese sambosek was yum! It had a bit of a dominos cheese pizza effect on it! Must try.
Prices are also fair and the service is great :)

A
1

1/5

0

Afthab Hussain

Being a regular customer very disappointed of the way whoever is handling this page and replying.

You may have had a lightning strike and your phone systems were down as you say which I doubt now after the attitude I got from the person replying and shows the importance you have for your customer despite of sending out a message way before closing time and instead of making upto a customer you give them attitude.

I regret patronizing your restaurant. I'm don't with you guys. And the reason is not your food but our attitude.

R
1

3/5

0

Roshan Perera

could not find a better option than this in Colombo

A
5

5/5

0

ajlalwani

Had the chicken Kasba it was very good. definitely the best place for Middle Eastern fare in Colombo

D
1

3/5

0

Dee

Nothing great about the food…few selected items are good…chicken shawarma is not good at all…

S
1

3/5

0

ShaBeer

So I call Arabian Knights to get my food delivered, and all they had to say was their delivery boy is out of town, so they cannot deliver. Truly customer service is awful. They may want to be remembered that it make take months to roll their magic with their great display of food but only seconds to lose customers with unacceptable service.

See 72 Comments