Artwork for pat pat lk temp top banner 1 with blog post
Artwork for GOURMET GROCERS top banner 2 test
Artwork for PMF Dinner-Promo-July-Yamu-Side-Bar Artwork for providore.shop sbb 2

4/5

Bombay Sweet House (Kollupitiya)

7, Dharmapala Mawatha, Colombo 3


Sadly closed, after years. Bombay Sweet House is the original Sri Lankan candy shop, the city's oldest candy makers, and still remains the best place for Indian sweets and a fresh glass of Faluda.



கொழும்பின் மிகப்பழைய பொம்பே சுவீட் கடை இன்றும் நகரின் மத்தியில் இயங்குவதை நீங்கள் அறிவீர்களா?

கொள்ளுபிட்டியில் அமைந்திருக்கும் இந்த சுவீட் ஹவுஸ்; லட்டு, மஸ்கட், பர்பி, ஜிலேபி போன்றவற்றை சுவைக்க  மட்டுமல்ல மணிக்கணக்கில் உட்கார்ந்து வம்பளக்கவோ பத்திரிகை படிக்கவோ அரசியல் பற்றி பேசவோ வசதியான இடம். இந்த கபே கலாச்சாரத்தை ஏனைய கபேக்களில் ஒரு கப்பச்சீனோவுக்கு ரூபா 300 கொடுத்தே அனுபவிக்கமுடியும். ஆனால் ஒரே வித்தியாசம் இங்கு கோப்பி கிடைப்பதில்லை என்பதுதான். அதற்கு பதிலாக உயரமான கிளாஸில் பரிமாறப்படும் பால், ஐஸ்கிறீம், பன்னீர், கசகசா கலந்த பலூதாவை முயற்சிக்கலாம்.

இதன் உரிமையாளரனா ஜோஹார்; இலங்கைக்கு பம்பாய் சுவீட்டுக்களை தந்த குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையை சேர்ந்தவர். இவர் சுவீட்கலையில் கைதேர்ந்தவர். இந்திய சுவீட்களை இலங்கைப்பாணியில் வழங்கத்தெரிந்தவர். அதனால்தான் இங்கு அவ்வளவு பிரபல்யமில்லாத ( ஆனால் இந்தியாவின் மிகச்சுவையான சுவீட்டான) 'ரசமலாய்'ஐ இங்கு கேட்பவர்களுக்கு மாத்திரம் செய்துகொடுக்கிறார். இன்னும் சுவீட்டுக்களை பற்றி அறிவுள்ள ஒருவருடன் அளவளாவதுகூட இனிப்பான அனுபவம்தான்.

எனவே இதுவரை இந்த இடத்திற்கு சென்றிருக்காவிட்டால் இப்போதே செல்லுங்கள். இது உங்களுக்காகத்தான் 50 வருடங்களாக திறந்திருக்கின்றது என்று உணர்வீர்கள். நீங்கள் "கொபீ பீன்" இலோ அல்லது "பரிஸ்டா"விலோ நேரத்தை கடத்துவதை காட்டிலும் இந்த அழகான பழைய இடம் மலிவான தெரிவே.

TIP

They are open all days of the week during Ramazan.

Address

7, Dharmapala Mawatha, Colombo 3

Directions

From Colpetty Junction turn up towards Liberty Plaza and it's before that, on your left.

Contacts

Facebook E-Mail

Report Inaccuracy

This place has closed down

Cuisine

North Indian

Price Range

Between Rs. 200 - Rs. 500

Dish Types

Candy Indian Sweets Faluda

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
4
Service Rating
3
Ambience Rating
3

Similar Places

See 19 Comments