3/5

Chinese Dragon Cafe

11 Milagiriya Avenue, Colombo 4


One of the oldest Chinese restaurants in Colombo, Chinese Dragon does an okay job.


இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட முதல் சீன உணவகமான (1942) சைனீஸ் ட்ரகன் கபே கொழும்பில் நீண்டகாலமாக தொடர்ந்து இயங்கும் உணவகங்களில் ஒன்றாகும். இது இன்றும் சீனாவில் இருந்து இங்கு குடியேறிய ஸ்தாபகரின் வாரிசுகளால் நடாத்தப்படுகின்றது.

அழகான காலனி காலத்து கட்டடம்; ஆயினும் இதைவிட சிறப்பாக அழகுபடுத்தியிருக்கலாம். சற்று இருளான கொஞ்சம் அழுக்கான சாப்பாட்டு அறைகளாக இருந்தபோதும் ஹொட் பட்டர் கட்டல்பிஷ் (கணவாய்) டெவல்ட் பிரோன் (இறால்) போன்ற இலங்கையரின் சீன் உணவுகள் மிக பிரபலம். இலங்கை பாணியில் சீன் உணவுகளை வழங்குவதும் விலையும் இவ்வுணவகத்தை இவ்வளவு நாளும் சந்தையில் தாக்குப்பிடிக்கச்செய்திருக்கிறது.  ற்காலத்தில் பல சீன உணவகங்கள் ஆரம்பிக்கப்பட்டதும் மேல்தட்டு மக்களை கவர்வதற்காக இந்த காலனி காலத்து கட்டடம் குளிரூட்டப்பட்டிருக்கிறது, இன்னும் சைனா டோல் பான் ஏசியன் டெலிவரி சர்வீசும் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நவீன வசதிகள் உணவுகளின் விலையை அதிகரித்து விட்டிருக்கிறது. மூன்று பேர் சாப்பிடுவதற்காக ஹொட் பட்டர் கட்டல் பிஷ் (கணவாய் ரூபா 750/-) ப்ரோன் இன் தாய் சிலி சோஸ் (இறால் ரூபா 700/-) கன்குன் (வள்ளலை ரூபா 400/-) ப்ரைட் ரைஸ் (ரூபா 450/-) லைம் சோடா (ரூபா 250/- ஒன்றிற்கு) எனபவற்றை வாங்கினால் மொத்தமாக ரூபா 3,000/- செலவாகும். இது கொழும்பின் மேல்தட்டு உணவகங்களின் விலையோடு ஒப்பிடுகையில்  பெரிய விலை இல்லையாயினும் நிச்சயமாக இது மலிவான இடமில்லை. இன்னும் இந்தவிலைக்கு போதுமான அளவு இவ்வுணவகம் நவீன மயப்படுத்தப்படவுமில்லை என்பதும் ஒரு நெருடல்.

பெல்லி போர்க் (பன்றி இறைச்சி ரூபா 500/-) கார்லிக் பிஷ் (மீன்) என்பன இங்கு மிக பிரபலம். ஏனைய உணவுகள் மோசம் எனும் அளவிற்கு இல்லாவிட்டாலும் இன்னும் நன்றாக பண்ணியிருக்கலாம் என்று சொல்லும் தரத்தில் இருக்கின்றன. இவ்வாறான சில நெருடல்கள் இந்த இலங்கை சீன உணவுகளின் தாய் நிறுவனத்தை விட்டும் மக்களை தூரமாக்கலாம்.

Address

11 Milagiriya Avenue, Colombo 4

Directions

Milagiriya Avenue is just north of Dickman's Road on Galle Road, as it becomes uniflow. From Marine Drive, it's just near the Bamba flats, between Melbourne and Jaya roads.

Contacts

E-Mail Facebook Website Twitter



Latest