Artwork for Sampath Top - June

4/5

Ministry Of Crab (Dutch Hospital)

Dutch Hospital Shopping Precinct, Colombo 1


Ministry of Crab is a high-end restaurant on Dutch Hospital premises that specializes in crab cuisine - the food is just plain mouth-watering and the service is good.நமது கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர்கள் மஹேல ஜயவர்த்தனவும் குமார் சங்கக்காரவும் கொழும்பில் உணவகமொன்றை நடாத்துவதை அறிவீர்களா? கொழும்பு உணவகங்களில் ஒரு நட்சத்திரமாய் பிரகாசிக்கும் அந்த பெரிய உணவகத்தின் பெயர் - மினிஸ்ட்ரி ஒப் க்ரப்.

தர்ஷன் முனிதாச இந்த நட்சத்திரங்களுடன் சேர்ந்து இவ்வுணவகத்தை நடாத்துகிறார். இவரைப்பற்றியும் கொஞ்சம் சொல்லவேண்டும். நிஹோன்பஷி ஜபானிய உணவகத்தில் உன்னனதமான உணவை நமக்கு தந்தவர் இவர்.

இலங்கையின் நண்டுகளை சுவைக்க உலகிலேயே மிகச்சிறந்த இடம் என்று உரிமை கோருகிறார்கள் இவர்கள். ஆனாலும் இங்கு விலைதான் பயம் காட்டுகின்றது. ஆகக்குறைந்த விலையாக ரூபா 2,500 இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். மயூரி ஹோட்டலில் கிடைக்கும் ரூபா 250 நண்டுக்கறி சாப்பாடு போன்றதல்ல இது. பாவிக்கப்படும் நண்டின் விலை (பொதுவாக இந்த வகை நண்டுகள் சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் ஏற்றுமதி ஆவதால் நம் நாட்டில் மக்களுக்கு கிடைப்பதில்லை), நட்சத்திர அந்தஸ்த்து, இடம் என்பன இந்தப்பெரிய விலைக்கு கொண்டுவந்திருந்தாலும் நமது கேள்வி; அது நியாயம்தானா என்பதே.

ஆனாலும் ஆச்சரியப்படும்விதமாக ஆம் என்றே பதில் சொல்கிறோம். யமு இதை கொழும்பின் சிறந்த உணவகமாகவே வகைப்படுத்துகின்றது. எப்படி என்று கேட்கிறீர்களா? அதை அறிய இக்கட்டுரையின் கடைசிவரை வாசிக்கவேண்டும்.

டச்சு ஹொஸ்பிட்டல் என்று இன்றும் அழைக்கபப்டும் கட்டடத்தில் நுழைந்து இடது பக்கமாக நடங்கள். தொங்கலில் உங்களுக்காக காத்திருக்கிறது மினிஸ்ட்ரி ஒப் க்ரப். இலேசாக ஒளியூட்டப்பட்டிருக்கும் உயர்ந்த கூரைகளையும் தடித்த சுவர்களையும் கொண்ட கட்டடத்தில் ஒரேஞ் மற்றும் கறுப்பு வண்ண பலகையால் ஆன மேசை, கதிரைகள் என அழகான உணவக அலங்காரம் உங்களுக்கு பார்த்ததுமே பிடிக்கும். இங்கு மெனு கூட எளிமையானது. குறைந்த வகையான உணவுகள் இருப்பதும் ஒரு வசதிதான்.

இங்கு நண்டுகளை ஒன்பது வித்தியாசமான அளவுகளில் வகைப்படுத்தியிருக்கிறார்கள். அரைக்கிலோ நண்டு முதல் ஒரு கோழியின் அளவில் இருக்கும் ஒன்றரை கிலோ நண்டு வரை இங்கே கிடைக்கின்றது. சமையல் முறை தெரிவுகள் கூட 6 இருக்கின்றன. உங்களுக்கு தேவையான அளவில் உள்ள நண்டை விருப்பமான சமையல் முறையில் சமைத்துப்பெறும் வசதி இங்கு உங்களுக்கு கிடைக்கின்றது.

பலவித வாதப்பிரதிவாதங்களின்பின் நாம் அரை கிலோ எடையுடைய நண்டை கார்லிக் க்ரப் என்ற முறையிலும் (ரூபா 2,500) ஒரு கிலோ 300 கிராம் எடையுடைய நண்டை பிளக் பெப்பர் க்ரப் என்ற முறையிலும் (ரூபா 7,500) சமைத்துக்கேட்டோம். போதாதற்கு ஒரு இறால் கறி (ரூபா 2,000) ஓடர் வேறு!

இங்கு உள்ள மிகச்சிறிய நண்டு கார்லிக் க்ரப் ஆக(வெள்ளை பூண்டு சேர்த்து) கிடைத்தது. மிகச்சுவையாக கொஞ்சம் இனிப்பு சுவையுடையதாக இருந்தது. பாணுடன் சாப்பிட கார்லிக் சோஸ் சுவையாக இருந்தது.

அதை தொடர்ந்து இறால் கறி. டைகர் ப்ரோன் என்றழைக்கப்படும் பெரிய இறால்கள் சுவையானது என்றாலும் கார்லிக் க்ரப் போல் சுவையானதல்ல.

அடுத்து பெப்பர் க்ரப் (மிளகில் சமைத்தது) வந்தது. தாராளமாக இறைச்சி இருப்பதுதான் இந்த அளவு பெரிய நண்டுகளின் அம்சம். சின்ன நண்டுகள் சுவையானவை என்று சொல்பவர்கள் இந்த பெரிய நண்டை சுவைகக் முடியாத ஏக்கத்தில் சொல்வதாக இருக்கும் என்று தோன்றிற்று. சின்ன கால்களிலும் தலையிலும் கூட அவ்வளவு இறைச்சி என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். நண்டின் கொடுக்குகளில் ஏறத்தாழ ஒரு கோழியின் கால்களில் இருக்குமளவு இறைச்சி இருக்கின்றது. ராஜாக்களின் சாப்பாடுதான் இது! இருந்தாலும் கோப்பையை வழிக்காமல் இருக்கமாட்டீர்கள். அந்தளவுக்கு இலங்கையின் மிளகினால் தயாரிக்கப்பட்ட குழம்பு ருசியாக இருக்கின்றது.

சரி இதற்காகத்தானா இவ்வுணவகத்தை இலங்கையின் சிறந்த உணவகம் என்கிறீர்கள் என்று கேட்கிறீர்களா? இல்லை தேங்காய் சம்பலுக்காக (பொல் சம்பல்) என்றால் அது நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த பதிலாக இருக்காது.

பாணுடன் (நாம் கடேபாண் என்றழைக்கும் சாதாரண பாண்தான்) மிளகு குழம்பை வழித்து தின்னும்போது பொல் சம்பல் ஓடர் ஒன்றும் கொடுத்தோம். இவ்வளவு பெரிய உணவகத்தில் பொல் சம்பல் கிடைப்பதே ஆச்சரியமானது. ஆனாலும் நான் இதுவரை சாப்பிட்டதிலேயே அதிக சுவையான பொல் சம்பல் இதுதான் என்பேன். தேங்காயுடன் மாசி நொறுக்குகள், எலுமிச்சம் புளி, மிளகாய் என ஒரு அலாதியான சுவை.

புதிய ஏற்றுமதி தர நண்டுகளை பாணுடனும் பொல் சம்பலுடனும் சாப்பிட இதைவிட வேறிடம் உலகில் இலலை! அதுவும் பிரெஞ்சு இத்தாலிய முறைகளில் அல்லாமல் நமது இலங்கையின் முறையிலேயே சமைத்து கிடைக்கிறதென்பது நல்லதொரு அனுபவம்தானே?

TIP

Go for the chilli crab.
All Reviews

Dinner at Ministry Of Crab remains one of the best experiences in the city. It's really tasty, exciting and fun. Expensive, but we highly recommend.

Ministry of Crab is a high-end restaurant on Dutch Hospital premises that specializes in crab cuisine - the food is just plain mouth-watering and the service is good.

Occupying prime space in the landmark Dutch Hospital complex, the restaurant specializes in serving enormous crustaceans that would otherwise be whisked away to more prosperous consumers in Singapore and Malaysia.

සිංහල කොළඹ වැදගත් බිම් සලකුණක් වන ලන්දේසි රෝහලේ වටිනා අවකාශයක පිහිටුවා ඇති MOC අවන්හල දැවැන්ත කවචජීවීන් සම්බන්ධයෙන් විශේෂයි. මේ ආහාර මෙතැනින් ලිස්සා ගියොත් කෙළින්ම යන්නේ සිංගප්පූරුවේ හෝ මැලේසියාවේ වඩා සමෘද්ධිමත් පාරිභෝගිකයන් වෙතයි.

தமிழ் நமது கிரிக்கட் அணியின் நட்சத்திர வீரர்கள் மஹேல ஜயவர்த்தனவும் குமார் சங்கக்காரவும் கொழும்பில் உணவகமொன்றை நடாத்துவதை அறிவீர்களா? கொழும்பு உணவகங்களில் ஒரு நட்சத்திரமாய் பிரகாசிக்கும் அந்த பெரிய உணவகத்தின் பெயர் - மினிஸ்ட்ரி ஒப் க்ரப்.

Address

Dutch Hospital Shopping Precinct, Colombo 1

Directions

Take the Galle Road north until it basically ends at the Galadari roundabout, continue straight past the Kingsbury and turn right towards the World Trade Center. It's inside the Dutch Hospital, to your left.

Contacts

E-Mail Facebook Website Twitter

Report Inaccuracy

Open until 11:00 PM

Cuisine

Sri Lankan

Price Range

More than Rs.1500

Dish Types

Seafood Crab

Ratings Breakdown

Overall Rating
4
Quality Rating
5
Service Rating
4
Ambience Rating
4
Similar Places

Have you visited this place?

Write your own review!
See 29 Comments