Artwork for Chutiduwa top banners - temp gif 2
Artwork for PickMe Flash top banner 11 Jan 2021
Artwork for Darley Road sidebar banner Artwork for Coffee post sidebar 1-1959 only

3/5

Ramani Fernando Salon

32 Elibank Road, Colombo 5

  • Call 0112582176
  • Open 9 AM to 6 PM (Tuesday to Saturday) - differs according to branch.


Ramani’s is a nice place and a good salon. It won't give you for money, but they're reliable and probably won’t ruin your hair. The staff – at the Nugegoda branch at least – are lovely. They haven’t changed in years, they remember all their clients and they’re just really, really sweet and friendly.



முதலில் இது குறைந்த விலை முடிதிருத்தும் நிலையம் அல்ல என்பதை சொல்லிவிடவேண்டும்! இங்கு எல்லாவற்றுக்கும் கட்டணம் அதிகம்தான். எனக்கு "ஸ்டான்டர்ட் கட்"டுக்கும் "Bப்ளோ ட்ரை"க்குமாக ரூபா 3000 செலவானது. இது நிச்சயமாக மிக அதிகம்தான்.

ஆனாலும் உங்களுக்கு கட்டுப்படியாகுமென்றால் போவதற்கு நல்லதொரு இடம்தான். கொழும்பின் 5 நட்சத்திர ஹோட்டல்களான சினமன் கிரான்ட், கொழும்பு ஹில்டன், தாஜ் சமுத்ரா, ஜெயிக் ஹில்டன் என்பனவற்றிலும் நுகேகொடை, பொரளை, எலிபேங்க் வீதி போன்ற இடங்களிலும் இதன் கிளைகள் இயங்குகின்றன.

நீங்கள் நினைக்கும் (ஏறத்தாள) எல்லா அழகு சிகிச்சைகளும் குளியல்களும் (ஸ்பா) இங்கு கிடைக்கும். வெக்சிங், ஸ்ட்ரெயிட்னிங், மெனிகியோ, பெடிகியோ, முடி உதிர்தலை தடுப்பதற்கான சிகிச்சை, முகம் மற்றும் உடம்பை வெள்ளையாக்குதல் (ப்ளீச்சிங்), புருவம் திருத்துதல், நகங்களை நீளமாக்குதல் (ஜெயிக் கிளையில் மட்டும்) என எல்லாம் உண்டு. இன்னும் உங்கள் பல்லில் வைரம் பதிக்கவேண்டுமானால் கூட இங்கு செல்லலாம். அதற்கு ஸ்மைல் ஜெம் என்று பெயர்.

ரமணி அழகான நல்லதொரு சலூன். உங்கள் முடியை பழுதாக்கமாட்டார்கள் என்று நம்பலாம். என்றாலும் கட்டணம் நிச்சயம் அதிகமே. நான் வழமையாக செல்லும் நுகேகொட கிளையில் பலவருடங்களாக அதே பணியாளர்கள் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் ரசனைகளை பற்றியும் நன்கு தெரிந்து வைத்திருக்கிறார்கள்.அவர்கள் பழகுவதற்கு நட்பானவர்கள், இனிமையானவர்கள். சிகிச்சையின் தரம் நிச்சயமாக பணியாளருக்கு பணியாளர் வேறுபடும். இருந்தாலும் இங்கு நல்ல தரத்தை எதிர்பார்க்கலாம்.

ஆனாலும் ரமணியில் கிடைக்கும் சேவைகளை கொழும்பில் இதைவிட குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ளமுடியும். வீடுகளில் இருக்கும் சலூன்களில் இன்னும் மலிவாகவே இருக்கும்.

ஆகவே உங்களிடம் நிறையவே பணமிருக்காவிட்டால் வழமையான அழகு சிகிச்சைகளுக்கு போவதற்கான இடமல்ல. ஆனாலும் முக்கியமான நிகழ்வுகளுக்கு போகக்கூடிய இடம்.

TIP

The opening times differ according to branch so check website for details.

Address

32 Elibank Road, Colombo 5

Contacts

E-Mail Website

Report Inaccuracy

Open 9 AM to 6 PM (Tuesday to Saturday) - differs according to branch.

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
3

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 29 Comments