Artwork for Senora delivery temp tb 1
Artwork for Astra Mayo top banner 2
Artwork for Alerics SBB 1 Artwork for new flash SBB 1

3/5

The Crab Company

54 Haig Road, Colombo 4, facing Marine Drive


It was with some delight that I heard tales of the Crab Company - the man behind the king of 90's Colombo restaurant Don Stanelys, now delivering export quality crab to your door. Every crab junkies dream - the stuff you want delivered, by someone reliable.



நல்ல நண்டு சாப்பிடுவதற்கான தேடலை நாம் விடுவதாக இல்லை. ஒவ்வொருநாளும் யாரேனும் ஒருவர் ப உணவகமொன்றையோ இன்னொரு சமையல் முறையினையோ நமக்கு அறிமுகப்படுத்துவதால், சுவையான நண்டை தேடும் நாக்கு அதன் தேடலை தொடர்கின்றது.

முடிவற்ற கரையோரங்களையும், துடிப்பான மீனவர்களையும், தெற்கு / தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நண்டுகளையும் கொண்ட எமது ஏடன் தோட்டத்தில் இலங்கையர்களெல்லாம் நண்டுக்கறி சுவைத்து மகிழ்கிறார்கள் என நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் உண்மை நிலவரம் துரதிஷ்ட்டவசமாக அப்படியில்லை!

இலங்கையின் ஏரிகள் உலகில் அதிக சதைப்பற்று மிக்க நண்டுகளை உற்பத்தி செய்தபோதும் அவற்றில் சிறந்தவற்றில் மிகப்பெரும்பாலானவை எமக்கு அண்மித்துள்ள நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகியவற்றிற்கு விமானத்தில் அனுப்பப்பட்டுவிட எஞ்சியதுதான் நமக்கு கிடைக்கின்றது. இவை கிழக்கு மற்றும் தென்னாசிய ச்மையலறைகளில் பாவிக்கப்படும் நண்டுகளைவிட எடையிலும் சதைப்பற்றிலும் குறைவானவை. ஆனாலும் பெரிய நண்டுகளையே சுவை குறைவாக உணருமளவுக்கு எமது ஹோட்டல்களும், உணவகங்களும் சாதாரண முறையில் சமைக்கின்றன. இங்கு கிடைக்கும் "பேக்ட் கிரப்" இல் 90% உருளைக்கிழங்கும் சீஸும்தான் இருக்கின்றது. "சில்லி கிரப்" கெச்சப்பில் மூச்சுத்திணறுகின்றது. "தாய் கிரப்" என்பது மஞ்சள் கறி என்பதாக புரிந்துவைத்திருக்கிறார்கள். நமக்கு நலல் சாப்பாட்டை தரும் பாதையின் மருங்குகளில் நாம் காணும் சாப்பாட்டுக்கடைகள் கூட நண்டு நல்ல தரத்தில் தொடர்ந்தும் சமைக்கிறார்களில்லை.

இவ்வாறான சந்தையில் நல்ல நண்டுக்கறி உண்பதற்காக அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடவேண்டி இருக்கின்றது. அப்படி இருக்கையில் கிரப் கம்பனி பற்றி கேள்விப்பட்டது மகிழ்ச்சியானதாகும். 90களில் கொழும்பின் உணவகங்களின் முடிச்சூடா அரசனாக இருந்த "டொன் ஸ்டான்லீஸ்" இன் வெற்றிக்கு காரணமான நபர் இப்போது ஏற்றுமதி தர நண்டுகளை நம் வீட்டிற்கே அனுப்ப தயாராகஇருக்கிறார்.

இங்கு நண்டுகளை யாழ்ப்பாண, சிங்கப்பூர், தாய்லாந்து முறைகளில் நாம் தெரிவுசெய்யும் முறையில் சமைத்து தருகிறார்கள். நண்டுகளின் அளவிலும் தெரிவிற்கு 3 வகைகள் உண்டு. ஒரு நாள் முன்னதாகவும் அறிவிக்கவும் வேண்டும். நான் விளம்பரப்படுத்தப்பட்டிருந்த தொலைபேசி இலக்கமான 0777 297 890 இற்கு அழைத்து மூன்று கிலோ நண்டை யாழ்ப்பாண முறையில் சமைத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டேன்.

டெலிவரி (விநியோகம்) சீராகத்தான் இருக்கிறது. மேலதிகமாக நான் ஓடர் செய்திருந்த "கிரி கொஸ்"ஐ மறந்திருந்தாலும் வீட்டிற்கு சொன்ன நேரத்தில் கொண்டு வந்து தந்தார்கள்.

அவ்ர்கள் பாத்திரத்தையும் சேர்த்து தருவதில்லை என்பதால் நான் தயார் செய்த பாத்திரத்தில் கறியை மாற்றிக்கொண்டேன். சோதித்து பார்த்ததில் நண்டு நல்லதாகவே தெரிந்தது. இன்னும் நன்றாக முருங்கை சேர்த்து சமைக்கப்பட்டிருந்தது. கொஞ்சம் சுவைத்து பார்த்ததில் அது யாழ்பாண முறைக்கு அபகீர்த்தி ஏற்படுத்தவில்லை. எனக்கு நண்டுக்கறி கொஞ்சம் இனிப்பும் நல்ல உறைப்பும் கலந்து இருப்பது விருப்பமானதால் நான் கிதுள் பாணியும் மிளகாய்த்தூளும் கலந்து சூடாக்கிக்கொண்டேன். கடைசியில் நல்ல சுவையான நண்டுக்கறி எனக்கு கிடைத்துவிட்டது. ப்ரோட்டாக்களோடும் கொஞ்சம் சொதியோடும் ஒரு அற்புதமான நண்டுச்சாப்பாட்டை ருசித்தோம்.

முருங்கை கலந்த சதைப்பற்றான கொடுக்குகளை கொண்ட நண்டு உள்நாட்டு சமையல் முறையில்; சிங்கப்பூர் அல்லது தாய்லாந்து முறைகளுக்கு எவ்விதத்திலும் குறைந்ததல்ல. நிச்சயமாக இது கொழும்பில் நல்ல நண்டு சாப்பிடுவதற்கான தெரிவுதான். இன்னும் வீடுகளுக்கே டெலிவரி செய்வது வசதி.

எல்லாமே நன்றாக அமைந்ததா என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அதில் முக்கியமானது விலை. 5 பேர் தாராளமாக சாப்பிட நான் ஓடர் செய்த 3 கிலோ நண்டிற்கு ரூபா 8500 செலவானது. அதாவது ஒருவருக்கு ரூபா 1800 அளவில். இது நிச்சயமாக மலிவு இல்லை. அடுத்து ஆகக்குறைந்தது 2 / 3 கிலோ ஓடர் செய்ய வேண்டியிருப்பதால் பெருமலவு பணம் தேவைப்படுகின்றது. தேவைப்படும் ரூபா 6000 - 8000 க்கு நண்பர்களுடன் சேர்ந்து பகிர்ந்துகொள்வதே வழி. தனியாக சாப்பிட இங்கு விலை மிக அதிகம்.

"மினிஸ்ட்ரி ஒப் கிரப்" http://www.yamu.lk/place/ministry-of-crab/ இல் கிடைக்கும் நல்ல நண்டுகளின் அளவிற்கு இல்லாவிட்டாலும் நண்டுகள் நல்ல சதைப்பற்று மிக்கதாகவும், குழம்பு சுவையானதகவும் (நமது ருசிக்கேற்ப சிலவற்றை சேர்த்துக்கொண்டபின்) இருக்கின்றது. ஆனாலும் மாதத்தில் ஒருமுறை முயற்சிக்ககூடிய இடமென்றாலும் நாளாந்தம், வாராந்த நண்டு சாப்பிட இன்னொரு இடத்தைத்தான் தேடவேண்டும்.

TIP

You need to have a large receptacle ready as they don't let you keep the steel bucket they bring the goods in. Heat lightly on the stove (not microwave before serving) and at this point you can add say lemon juice, chilli, sugar to taste.

Address

54 Haig Road, Colombo 4, facing Marine Drive

Contacts

E-Mail Facebook

Report Inaccuracy

This place has closed down

Price Range

More than Rs.1500

Dish Types

Seafood Crab

Ratings Breakdown

Overall Rating
3
Quality Rating
3
Service Rating
3
Ambience Rating
3

Similar Places

Have you visited this place?

Write your own review!
See 5 Comments